சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகள் பலரும் ஒருகட்டத்தில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த சம்பவமே இருக்கிறது எடுத்துக்காட்டு நடிகை மீனா ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் முத்து படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார் அப்படித்தான் இப்பொழுது சினிமா உலகமும் நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் பல டாப் நடிகர்கள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகள் தற்போது ஹீரோயின் போல மாறுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற குழந்தைதான் யுவினா.
இதுபோன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருப்பார் இப்படி சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வழக்கமாக வைத்துள்ளார் யுவினா.
இவர் மும்பையை சேர்ந்தவர் இவரது அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சினிமாவில் ஆரம்பத்திலிருந்தே அதிகம் ஆர்வம் இருந்ததால் சென்னையிலேயே செட்டிலாகிவிட படங்களில் நடித்து வருகிறார். யுவினா தமிழில் மேலும் அரண்மனை, கத்தி, மஞ்சப்பை போன்ற பல படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.
தற்போது கூட கன்னடத்தில் உருவாகும் மம்மி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை யுவினா ஆளே மாறிப் போய் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறி இருக்கிறார் அதன் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
