யுவன் சங்கர் ராஜா போட்ட “மொக்க பாட்டு” இதுதான் – சொல்லி சிரித்த பிரபல நடிகர்.!

இசைஞானி இளையராஜாவை தொடர்ந்து அவரது மகன் யுவன் சங்கர் ராஜா தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் பல படங்களுக்கு  சிறப்பாக இசையமைத்து முன்னணி இசை அமைப்பாளராக வளம் வந்து கொண்டிருக்கிறார் இவர் முதலில் சரத் குமார் நடிப்பில் உருவான அரவிந்தன் என்னும் படத்திற்கு இசையமைத்து அறிமுகமானார்.

அதன் பின் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ் போன்ற உச்ச நட்சத்திர நடிகரின் படங்களுக்கு இசையமைத்து.. தன்னை பிரபலப்படுத்திக் கொண்டதோடு தனக்கான ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இப்பொழுது கூட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

சினிமா உலகில் எப்படி மிகப்பெரிய ஒரு உயரத்தை எட்டி உள்ளாரோ அதேபோல நிஜ வாழ்க்கையில் தற்போது தனது குடும்பத்துடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார். இவன் பற்றிய பேச்சுக்கள் அண்மைக்காலமாக வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அதில் ஒன்றாக யுவன் சங்கர் ராஜா இதுவரை இசை அமைத்ததிலேயே மிக மொக்கையான பாட்டு என்றால் இதுதான் என நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா பல சிறந்த பாடல்கள் இசையமைத்துள்ளார் ஆனால் அவர் இசையமைத்ததிலேயே மிக மொக்கையான பாடல் என்றால் மம்முட்டி நடிப்பில் உருவான ஒரு படத்தில் “தித்திப்பா இருப்பா தேன் தேன்னாய் இனிப்பாய்” என்ற பாடல் தான் யுவன் ஷங்கர் போட்ட பாடல்களிலேயே மிகவும் மொக்கையான பாட்டு ஆனால் அது மொக்கை என்று எங்களுக்கு தெரியும்..

premji
premji

இயக்குனருக்கு அது ரொம்ப பிடித்துப் போனதால் அப்பொழுது அந்த பாடல் போடப்பட்டது. அதை இப்பொழுது கூட நாங்கள் நினைத்து நினைத்து சிரிப்பது வழக்கம் என பிரேம்ஜி ஒரு பேட்டியில் கூறினார் நடிகர் பிரேம்ஜி பக்கத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment