தல ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன யுவன் ஷங்கர் ராஜா.! எந்த மாதிரியான செய்தி சொன்னார் தெரியுமா.? வெளியான தகவல்.

ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் பல வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தாலும் ரசிகர்களின் முதன்மையான கேள்வி படம் எப்பொழுது வேண்டுமானாலும் படம் வரட்டும் ஆனால் படத்தைப் பற்றி அப்டேட்டுக்களை வெளியிட்டால் போதும் என தற்போது வரையிலும் கூறி வருகின்றனர்.

ஆனால் இதற்கு படக்குழு எந்த ஒரு பலனையும் கொடுக்கமால் இருப்பது. அவரது ரசிகர்களை ஏமாற்ற செய்வதால் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் குழப்பம் ஏற்பட்டு யார் யாரை கேட்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அஜித்தும் இந்த படத்தின் சில அப்டேட்களை வெளியிட நினைத்தாலும் தற்போது இருக்கின்ற சூழல் சரியில்லாத தால் அஜித்துக்கும் மௌனமாக இருந்து வருகிறார்.

இருப்பினும் இந்த படத்தை பற்றி தெரிந்த சில பிரபலங்கள் மற்றும் இந்த படத்தில் நடித்த பிரபலங்களும் வலிமை படத்தை பற்றி அப்டேட்களை கூறி வருகின்றனர் அது ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருந்தாலும் தற்போது நடந்துவரும் இந்தியா நியூசிலாந்து உடலான இறுதிப் போட்டியின் போது கூட அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் மாநாடு படக்குழு மீட்டிங் ஒற்றை சமூக வலைதளப்பக்கத்தில் போட்டது. அந்த மீட்டிங்கில் சிம்பு, வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் சங்கர் ராஜா ஆகியோர் வீடியோ கான்பரன்சில் கலந்துகொண்டனர் அப்போது பல சுவாரஸ்யமான விஷயங்கள் பேசப்பட்டது அதில் வலிமை படத்தை பற்றியும் பேசினர்.

ஹீரோ என்ட்ரியாகும் அறிமுக பாடல் நாட்டுப்புற மெட்டில் அமைந்திருக்கும் என்று யுவன் கூறினார் இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபுவும் அந்த பாடல் ரசிகர்களை ஆட வைக்கும் என்றும் கூறினார் இந்தப் பாடலை விக்னேஸ்வரன் அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உணர்ச்சிகரமான அம்மா பாசத்துக்காக பாடல் ஒன்று இருப்பதாக யுவன் ஷங்கர் ராஜா கூறினார். யுவன் ராஜா வெளியிட்ட இச்செய்தி  தற்போது ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்து உள்ளது.

Leave a Comment

Exit mobile version