சிம்புவின் ரசிகர்களுக்கு மாநாடு படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை தட்டிவிட்ட யுவன் ஷங்கர் ராஜா.!

வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வருபவர் சிம்பு இவர் உடல் எடை கூடியதால் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் தவித்து வந்தார் உடனே மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஈஸ்வரன் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானாலும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று விட்டது இதனைத் தொடர்ந்து சிம்பு வெங்கட்பிரபு கூட்டணியில் இணைந்து மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது வெங்கட் பிரபு மற்றும் சிம்பு இணைந்ததால் மாநாடு திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது.

மேலும் மாநாடு திரைப்படத்தைப் பற்றி அப்டேட் கொடுங்கள் என ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கேட்டு வந்த நிலையில் படக்குழுவினர் இந்த திரைப்படத்தின் பாடலை வெளியிடுவதாக கூறி ஒரு சில காரணங்கள் குறித்து வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இசையமைத்து வரும் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கங்களில் இந்த படத்தை பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் அதாவது யுவன் ஷங்கர் ராஜா கூடிய சீக்கிரம் இந்த திரைப்படத்திலிருந்து பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

yuvan
yuvan

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் ஒரே கொண்டாட்டத்தில் இருப்பது மட்டுமல்லாமல் படத்தை பார்ப்பதற்கு மிக ஆவலுடன் இருக்கிறது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் சிம்புவின் அடுத்த திரைப்படத்தை பற்றி தகவல் வெளிவருமா என கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment