சாண்டி மாஸ்டருடன் வெறித்தனமாக நடனமாடிய யுவன் சங்கர் ராஜா.! வைரலாகும் வீடியோ..

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பெரிதாக நடனமாடி யாரும் பார்த்திருக்க மாட்டோம் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது முதன் முறையாக இவர் வெறித்தனமாக நடனமாடிய வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் சிறந்தவராக யுவன் சங்கர் ராஜா திகழ்கிறார். இளையராஜாவின் மகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்பொழுது தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளார்.

தன்னுடைய 16 வயதிலேயே இசைத்துறையில் பணியாற்ற தொடங்கிய இவர் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் பல பாடல்களை தந்துள்ளார். மேலும் இவர் முதன் முறையாக 1997ஆம் ஆண்டு சிவா தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த அரவிந்த் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து ஏராளமான நட்சத்திரங்களின் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது வரையிலும் இவர் 125 பாடலுக்கு மேல் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா துறையில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். கிராமத்து கதையை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி தயாரித்து இருந்தது.

இத்திரைப்படத்தில் அதிதி சங்கர்,  பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா அவர்கள் விஷாலின் லத்தி, தனுஷின் நானே வருவேன், லவ் டு போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை பார்த்த ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறியிருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் பாட்டு பாடிக்கொண்டே மிகவும் வெறித்தனமாக டான்ஸ் மாஸ்டர் சாண்டியுடன் நடனமாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.