ஒலிம்பிக் வீரர்களுக்காக யுவன் சாகர் ராஜா இசையமைத்த பாடல்.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவருடைய பாடல்கள் மற்றும் பிஜிஎம்-கே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இவர் தற்போது அஜித் நடிக்கும் வலிமை படத்திற்கு இசையமைத்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்திற்கும் இவர்தான் இசையமைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவரின் பாடல்கள் இன்று வரையிலும் ரசிகர்களின் விரும்பத்தக்க பாடல்களாக அமைந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள தமிழக வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ” வென்று வா வீரர்களே ” எனும் பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஜப்பானில் உள்ள டோக்கியோவில் கொரோனா ஆச்சுருந்துதல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் கொரோனா காரணத்தால் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வருகின்றன.

இப்போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் சென்றுள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அதிகப்படியான வீரர்கள் சென்றுள்ளனர். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் கூடைப்பந்து கழகம் ஒரு பாடலை தயாரித்துள்ளது. இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர்  ராஜா.

இந்நிலையில் தமிழக விளையாட்டு வீரர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள வென்று வா வீரர்களே பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா பாடிய இசையமைத்துள்ளார் இந்த பாடல் தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் ஆசியுடன் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Exit mobile version