யுவன் எனக்கு மிகவும் நெருக்கமானவர் – உண்மையை சொன்ன போனிகபூர்

அஜித்தின் வலிமை திரைப்படம் வெளிவந்த தற்போது ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கி வருகிறது குறிப்பாக வசூலில் ருத்ர தாண்டவம் ஆடுகிறது என்று தான் சொல்லவேண்டும் முதல் நாளில் அனைத்து தமிழ் நடிகர்களின்  வசூலை முந்தியது வலிமை.

வருகின்ற நாட்களில்  அதிக வசூல் செய்து புதிய சாதனை படைக்க ரெடியாக இருக்கிறது . முதல் நாளில் மட்டுமே வலிமை படம் தமிழகத்தில்  36.17 கோடி வசூலித்து அதனை தொடர்ந்து நல்ல வசூல் வேட்டை கண்டு வருகிறது. படம் ஒரு பக்கம் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் ரசிகர்கள் ஒரு சின்ன வருத்தம் இருக்கிறது அதாவது வலிமை திரைப்படத்திற்கு யுவனின் இசை பார்க்க முடியாததால் போனது தானாம்.

முதலில் வலிமை படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டாகி இருந்தார் திடீரென அதில் இருந்து விலகியதால் பிறகு ஜிப்ரானின் பின்னணி இசை பணிகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் யுவன் அளவுக்கு  ஜிப்ரான் இசையமைக்க வில்லை என கூறப்படுகிறது.

யுவனுக்கும், ஹச். வினோத்துக்கும் இடையே தான் பிரச்சனை ஏற்பட்டது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா அஜித்தின் தீவிர ரசிகர் என்பதை அவரே பல மேடைகளில் சொல்லி உள்ளார் மேலும் அஜித்தின் எந்த படமாக இருந்தாலும் முதல் நாளிலேயே பார்த்துவிட்டு கொண்டாடுவார்.

ஆனால் வலிமை திரைப்படத்தை முதல் நாள் யுவன் பார்க்கவில்லை என கூறப்படுகிறது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரே ஒரு பதிவை மட்டும் போட்டுள்ளார் அதில் அவர் சொன்னது : ஜிப்ரான் பிஜிஎம் நைஸ் என்று குறிப்பிட்ட அவர் தனது பாடல், விசில் தீமை பாராட்டும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என கூறியிருந்தார்.

இந்த நிலையில் போனிகபூர் அளித்த பேட்டி ஒன்றில் இவனுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர் யுவன் மியூசிக் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஹிந்தி படம் ஒன்றில் அவருடன் இணைய இருக்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.

Leave a Comment