ஜீ தமிழ் சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் புதிய யூட்யூப் பிரபலம்.! அட, இவர் மோட்டிவேஷன் ஸ்பீக்கர் ஆச்சு.. உற்சாகத்தில் ரசிகர்கள்.

சமீப காலங்களாக சோசியல் மீடியாவின் மூலம் பிரபலமடைந்து அதன் பிறகு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வரும் நடிகர்,நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. அதாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக திரைப்படங்களில் நடித்து இதன் மூலம் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று வந்த நடிகர்,நடிகைகளின் காலம் மாறி தற்பொழுது சோசியல் மீடியாவின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இதன் மூலம் வாய்ப்பை பெற்று வருகிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் முன்பெல்லாம் நடிப்பதற்கான வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக பல பேரை சந்திக்க வேண்டும் ஐந்தாறு இடங்களில் ஏறி இறங்க வேண்டும் அதன் பிறகும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பது மிகவும் குறைவு. ஆனால் எப்பொழுது சோசியல் மீடியாவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற தொடங்கியதோ அதில் இருந்து திறமை உள்ளவர்கள் டப்ஸ்மாஷ் செய்து தங்கள் வீடியோ வெளியிடுவதன் மூலம் இவர்களுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு தானாக தேடிப்போய் கிடைக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தனது மோட்டிவேஷன் ஸ்பீச் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிரபலம் ஒருவர் தற்பொழுது ஜீ தமிழுக்கு என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதாவது சமூக கருத்துக்களை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக பாசிட்டிவாக பேசி வீடியோவை வெளியிட்டு பிரபலமடைந்தவர் தான் சசிலயா.

Sasilaya

பிறகு போகப்போக இவருடைய தமிழ் உச்சரிப்பு மற்றும் ஸ்டைல் ஆகியவை ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது எனவே மோட்டிவேஷன் ஸ்பீக்கர் என அனைவராலும் அழைக்கப்பட்டார். மேலும் சில யூடியூப் சேனல்களிலும் நெறியாளராகபணியாற்றி வந்தார் சமீபத்தில் இவர் பயில்வான் ரங்கநாதன் பற்றி பேசிய பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வைரலானது.

இந்நிலையில் தற்பொழுது சசிலயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக ரங்கநாயகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாக இருக்கிறார். இவர் நடித்து வரும் காட்சிகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அதோடு மட்டுமல்லாமல் மோட்டிவேஷன் ஸ்பீக்கராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள இவர் நடிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version