உங்கள் உயிர் உங்களை விட உங்கள் குடும்பத்திற்கும் வெற்றிமாறன் உருக்கமான பேச்சி.! வேற என்ன சொன்னார் தெரியுமா.?

சினிமாவில் தற்போது பல்வேறு விதமான கதைகளை இயக்கி வெற்றிநடை கண்டு வரும் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது அடுத்தடுத்த சிறப்பான நடிகர்களை வைத்து வித்தியாசமான கதையை கையாண்டு மேலும் உச்சத்திற்கு செல்ல ரெடியாக இருக்கிறார்.

இவர் இயக்கத்தில் வெளியான அசுரன், ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் என்ற திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார் இந்த திரைப்படத்திற்காக அவர் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறார்.

அதற்கு காரணம் சமீபத்தில் இவரது படங்கள் வெற்றி பெற்றதோடு இவர் தேசிய விருதையும் கைப்பற்றியதால் தற்போது வருகின்ற படங்களுக்காக சம்பளத்தை அதிகரித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளன.

இப்படியிருக்க அசுரன் படத்தில் நடித்த நித்தீஷ் வீரா இறப்பு குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். அசுரன் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நித்திஷ் வீரா  கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார் அவரது மறைவு குறித்து வீடியோ மற்றும் பதிவை வெளியிட்ட வெற்றிமாறன் கூறியது.

நண்பர் நித்திஷ் ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்ற செய்தியை எனக்கு கிடைத்தது. அவர் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தேன் இன்னும் இரண்டு நாட்களில் முன்னேற்றமும் தெரியும் என சொன்னார்கள் ஆனால் திடீரென அவர் இறந்தது எங்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

அசுரன் படத்தில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த ரித்தீஷ் அவர்களுக்கு தற்போது நல்லதொரு பட வாய்ப்புகள் உள்ளதாக சமீபத்தில் என்னிடம் தெரிவித்தார் இப்படி சினிமாவில் இரண்டாவது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறிக் கொண்டிருந்த நிலையில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறினார்.

மேலும் நாம் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய காலமிது கொரோனா பாசிட்டிவாக இருப்பதால் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் நாம் சரியான நேரத்திற்கு விரைவாக மருத்துவரை அணுகினால் மட்டுமே அவர்களின்  நமக்கு சிகிச்சை அளிக்க முடியும். மருத்துவரிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் தடுப்பூசிகள் போட்டவர்களுக்கு  பாதிப்பு பெரிதாக இல்லை என்கின்றனர்.

இளைஞர்களுக்கு பொறுப்பாக வீட்டில் இருங்கள் மாஸ்க் அணிந்து கொண்டு வெளியில் செல்லுங்கள் உங்கள் உயிர் உங்களை விட உங்கள் குடும்பத்திற்கும் சுற்றார்களுக்கும் முக்கியம் என தெரிவித்தார்.

Leave a Comment