இந்திய அணியின் புதிய கேப்டன் ரோஹித் ஷர்மா குறித்து பேசிய இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர்.! என்ன சொல்லியுள்ளார் தெரியுமா.? வெளியான பரபரப்பு செய்தி.

இந்திய அணியில் அதிரடியாக பல மாற்றங்கள் சமிபகாலமாக நிகழ்ந்து வருகின்றன ஆனால் அது எல்லாம் ஒர்க் அவுட் ஆகுமா.. என்பதுதான் கேள்விக்குறி ஆனால் பிசிசிஐ ஒரு முடிவு எடுத்தால் அதில் இருந்து பின் வாங்குவது போல தெரியவில்லை.

20 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோற்றதை அடுத்து இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். ரவி சாஸ்திரியின் பயிற்சியாளர் காலமும் நிறைவு பெற்றதால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  நியமித்துள்ளது 20 ஓவர் கிரிக்கெட் பார்மட்டில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார்.

மேலும் இந்திய அணி சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளது. இந்த நிலையில் நாளை இந்தியா, நியூசிலாந்து உடன் 20 ஓவர் கிரிக்கெட் விளையாட இருக்கிறது இதில் பல இளம் வீரர்களை களமிறங்கி உள்ளது அவர்களில் ஒருவராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரரான வெங்கடேஷ் ஐயர்  தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நீங்கள் யாரை போல இருக்க விரும்புகிறீர்கள் என கேட்டுள்ளனர் அதற்கு அவர் நான் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் போல இந்திய அணியில் சிறப்பாக செயல்பட இருக்கிறேன் ஏனென்றால் அவர் ஒரு ஆல்ரவுண்டர் நானும் அவர் போல இந்திய அணியில் விளையாட ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

rohit sharma
rohit sharma

மேலும் ரோஹித் சர்மா குறித்து அவர் பேசினார் ரோஹித் சர்மா அவர்கள் எல்லாவிதமான போட்டிகளிலும் தனது திறமையை வெளிக்காட்டி அசத்தி வருகிறார். ரோஹித் ஷர்மா எதிரணிக்கு எப்பொழுதும் குடைச்சல் கொடுக்கக்கூடிய வீரர் என புகழ்ந்து பேசினார்.

Leave a Comment