சிவகார்த்திகேயனுக்கு நச்சின்னு முத்தம் கொடுத்த இளம் நடிகை.? இணையதளத்தை ஆட்டிப்படைக்கும் புகைப்படம்

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் சினிமா உலகில் எந்த ஒரு பின்னணிகளும் இல்லாமல் வளர்வது ரொம்பவும் கஷ்டம் அப்படி கஷ்டப்பட்டு வந்தவர்கள் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படிப்படியாக தனது திறமையின் மூலம் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

சமீப காலமாக தமிழ் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுகின்றன. அந்த வகையில் டான், டாக்டர் போன்ற படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது. இதனால் சிவகார்த்திகேயனின் அடுத்த அடுத்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கடைசியாக இவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பாராத அளவிற்கு சிறப்பாக இல்லாததால் மோசமான விமர்சனத்தை பெற்றது.

இதிலிருந்து மீண்டு வர இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க  சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் வெறித்தனமாக நடித்து வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார் மேலும் மிஷ்கின், கவுண்டமணி, யோகி பாபு, சரிதா போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் வெகு விரைவில் வெளிவர  இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயனை பற்றிய புதிய மற்றும் பழைய செய்திகள் இணையதள பக்கங்களில் உலா வருவது வழக்கம் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் கன்னத்தில் ஒரு நடிகை முத்தமிட்டு இருக்கிறார்.? அந்த புகைப்படம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் இருக்கும் சிறுமி வேறு யாரும் அல்ல..

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் வெளிவந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபி நக்ஷத்ரா தானாம்.  இதை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுத்த குழந்தை நட்சத்திரமா இப்படி வளர்ந்து விட்டார் எனக் கூறி லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

abi

Leave a Comment

Exit mobile version