ஷிவானியை தனக்கு ஹீரோயினாக்க விரும்பும் இளம் நடிகர்!! யாருன்னு பாருங்க.

shivani-narayanan
shivani-narayanan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை சிவானி நாராயணன். இவர் இதனை தொடர்ந்து பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் தற்போது கொரோனா காரணத்தினால் பல நடிகர், நடிகைகள் தங்களது புகைப்படங்களை வெளியிடுவதும், ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்றவற்றை பொழுதுபோக்காக செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் காக்கா முட்டை. இத்திரைப்படத்தில் சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை என்று விக்னேஷ் மற்றும் ரமேஷ் இந்த இரண்டு சிறுவர்கள் நடித்திருப்பார்கள். தற்பொழுது இவர்கள் இளம் நடிகர்களாக இணையதளத்தில் தங்களது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் பெரிய காக்கா முட்டை விக்னேஷ் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்பொழுது நீங்கள் ஹீரோவாக நடித்தால் ஹீரோயின் யார் என்று ரசிகர்கள் கேட்டுள்ளார்கள். அதற்கு விக்னேஷ் சிவானி நாராயணன் தான் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கவர்ச்சி நடிகை என்றாலும் ஷிவானி நாராயணன் தான் என்றும் கூறியுள்ளார்.