குடிகாரனாக நடிக்க தனி தில்லு வேண்டும்..! தளபதியை புகழ்ந்து தள்ளிய பிரபலம்..!

0
vijay-1
vijay-1

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் இவர் சமீபத்தில் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது.

இதனை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கும் மற்றொரு திரைப்படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தை தில் ராஜி அவர்கள்தான் தயாரித்து வருகிறார். இது ஒரு பக்கமிருக்க மாஸ்டர் படத்தில் விஜய் குடிகாரனாக நடித்தது பற்றி லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அந்தவகையில் அவர் பேசியது என்னவென்றால் சமீபத்தில் தான் நான் உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளேன் இந்நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மிக பிஸியாக இருப்பதாக கூறி உள்ளார்.

அப்பொழுது அவரிடம் பேட்டியில்  ஒருவர் பெரிய ஹீரோக்களுக்கு தகுந்தார்போல் உங்கள் கதையில் நீங்கள் மாற்றம் செய்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய மாஸ்டர் திரைப்படத்தில் கூட மிகப்பெரிய நடிகரான விஜய் சார் அவர்கள் கூட குடிகாரன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவர் எவ்வளவு பெரிய நடிகர் என்று அனைவருக்கும் தெரியும் அந்த வகையில் என்னுடைய திரைப்படத்திற்காக தன்னுடைய இமேஜை கூட பார்க்காமல் இப்படி நடித்து கொடுத்தார். ஏனென்றால் அப்படி பட்ட கதாபாத்திரம் இந்த கதைக்கு மிகவும் முக்கியமாக அமைந்தது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் கதையை நான் எப்பொழுதோ எழுதி விட்டேன் ஆனால் விஜய் சார் அதன் பிறகுதான் இந்த கதையை பார்த்தார். அது மட்டுமில்லாமல் எந்த ஒரு கதாபாத்திரத்திற்கும் விஜய் சார் என்னை கட்டாயப்படுத்த கிடையாது. என்று கூறியது மட்டுமில்லாமல் விஜய் சாரை லோகேஷ் கனகராஜ் புகழ்ந்துள்ளார்.