பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து விச்சாளர் சக்லைன் முஷ்டாக் சச்சினை பற்றி என்ன கூறினார் தெரியுமா.! விவரம் இதோ!!

0

கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக இன்றளவும் மக்கள் மற்றும் ராசிகள் மத்தியில் நிலைத்து நிற்பவர் சச்சின் டெண்டுல்கர் என்பது நாம் அறிந்ததே அதேபோல கிரிக்கெட் வரலாற்றில் அதிகப்படியான கிரிக்கெட் வீரர்களுக்கும் பிடித்தமான வீரராக திகழ்ந்த கொண்டிருப்பவர் சச்சின்.பல கிரிக்கெட் வீரர்கள் அவரை பற்றி வந்துள்ளனர்.அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து விச்சாளர் ஜாம்பவான் சக்லைன் முஷ்டாக் அவர்கள் சச்சினை பற்றி சமீபத்தில் பகிர்ந்துள்ளார் அதில் அவர் கூறியது.

சச்சினிடம் நான் பலமுறை விளையாடி உள்ளேன் ஆனால் அவரிடம் ஒரே ஒருமுறை மட்டும் தான் ஸ்லெட்ஜிங் செய்துள்ளேன் அதுவே கடைசியாகவும் அமைந்தது என கூறினார் நம்மை ஆச்சரியப்படுத்தினார்.இந்த சம்பவம் 1997 ஆம் ஆண்டு கனடாவில் நடந்த சஹாரா கோப்பை தொடரில் தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சச்சின் விளையாடும்போது அவரை ஸ்லெட்ஜிங் செய்தேன். அது நான் அவரைப் பார்த்து ஏதோ சொன்னேன் ஆனால் தற்போது எனக்கு சரியாக நினைவில் இல்லை ஆனால் அதற்கு அவர் தக்க பதிலடி கொடுத்து என் நெஞ்சை தைத்தார் அது இன்றளவிலும் என் நினைவில் உள்ளது .

நான் அவரை ஏதோ சொல்லி இருந்தேன் அதற்கு அவர் என்னிடம் வந்த நான் உங்களிடம் தகாத முறையில் நடந்தது இல்லையே என் நீங்கள் ஏன் என்னிடம் தவறாக நடக்கிறார்கள் என்று கேட்டார் சச்சின் அப்படி கேட்டதும் எனக்கு மிகவும் தர்மசங்கடமாக விட்டது எனக்கே என்னை நினைத்து வெட்கப்பட்டேன் அவர் அப்படிக் கேட்டதும் அவரிடம் என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை மேலும் உங்கள் மீது உரிய மதிப்பு வைத்திருக்கிறேன் என்றார் சச்சின் இதனையடுத்து போட்டி முடிந்த பின் அவரை சந்தித்து நான் மன்னிப்பு கேட்டேன் என தற்போது நம்மிடம் கூறி மனம் உருகினார் சக்லைன் முஷ்டாக்.