திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தை பெற்றுக் கொள்ளலாம்..! 50 வயதில் ஆசைய பாரு..!

குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்றால் திருமணம் செய்து கொள்வது கட்டாயம் கிடையாது ஆகையால் திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என அஜித் பட நடிகை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை தபு இவ்வாறு பிரபலமான நமது நடிகை அதன்பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற திரைப்படத்திலும் அர்ஜுன் நடித்த தாயின் மணிக்கொடி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

என்னதான் இவர் பல திரைப்படத்தில் நடித்திருந்தாலும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் இவருக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது அந்த வகையில் இவர் ஜோதிகா நடித்த சினேகிதியே திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி மலையாளம் போன்ற பல்வேறு மொழிகள் எல்லாம் திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் நமது நடிகைக்கு தற்பொழுது 50 வயதுக்கு மேலாகிவிட்டது என்று சொல்லலாம்.

மேலும் தற்பொழுது இவருக்கு வயது முதிர்ந்தாலும் சரி இதுவரை இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் பேசிய பொழுது குழந்தை பிறப்பு குறித்து பல்வேறு கேள்விக்கு இவர் பதில் கொடுத்துள்ளார்.

அப்பொழுது மற்ற பெண்களைப் போல எனக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஆசை ஆனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார் மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்து விட்டால் என்னுடைய வயது அதற்கு தடையாக இருக்காது

ஏனெனில் வாடகை தாய் மூலமாக கூட குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் என்னை பொருத்தவரை குழந்தை பெற்றுக் கொள்வதற்கு திருமணம் அவசியம் கிடையாது என்று தெரிவித்துள்ளார் இவ்வாறு அவர் பேசிய கருத்து சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment