இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு வேற எங்கேயாவது போய் பொழைக்கலாம்.! வாரிசு படத்திலிருந்து வந்த பொய்யான தகவலால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…

varisu
varisu

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் பீஸ்ட் திரைபடத்தை தொடர்ந்து தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இன்னும் குறுகிய காலகட்டங்கள் இருக்கும் நிலையில் வாரிசு படத்தின் ரிலீஸ் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து வாரிசு படத்திலிருந்து வெளியான அப்டேட்டுகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் சமீபத்தில் வெளியான ட்ரெய்லரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

யார் என்ன வேணாலும் விமர்சிக்கட்டும் என்று அவர்களுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள் இப்படி இருக்கையில் தற்போது வாரிசு படத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது அந்த தகவல் ஒரு பொய்யான தகவல் என்று கண்டுபிடித்து நெட்டிசன்கள் வாரிசு படக் குழுவினரை வறுத்தெடுக்கின்றனர்.

அதாவது வாரிசு படத்தில் இருந்து வெளியான டிரைலரை பார்த்த பலரும் இது ஒரு மெகா சீரியல் போல் இருக்கிறது என்றும் இந்த ட்ரெய்லரை பார்த்தால் தெலுங்கில் வெளியான ஒரு சில திரைப்படத்தின் சாயலாக இருக்கும் எனவும் ட்ரோல் செய்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் வாரிசு ட்ரெய்லர் அதிக லைக்குகளை பெற்றுள்ளதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இது எப்படி சாத்தியமாகும் என்று எண்ணி நெட்டிசன்கள் இதை அலசி ஆராய்ந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது இந்த லைக்குகள் அனைத்தும் bot மூலம் பெற்ற லைக்குகள் என்று இதனால் இந்த பொழப்பு பொழைக்க வேற ஏதாவது பொழப்பை பார்த்துக்கொண்டு பிழைத்து கொள்ளலாம் என்று விமர்சித்து வருகிறார்கள்.

விஜயின் வாரிசு பட ட்ரெய்லரை பார்த்து சும்மாவே ரோல் செய்து வந்த நெட்டிசங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் சும்மா விடுவார்களா என்ன எப்படியோ இதயம் கண்டுபிடித்து விட்டார்கள் இனிமேலாவது பொய்யான தகவலை சொல்லாமல் படத்தை ப்ரோமோஷன் செய்யுங்கள் என்று தற்போது பலரும் கூறி வருகிறார்கள்.