பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் படிப்பு இருந்தா தான் மரியாதை கிடைக்கும்.! வெறித்தனமாக வெளியான வாத்தி படத்தின் ட்ரெய்லர் இதோ…

0
vaathi
vaathi

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் அனைத்து பணிகளையும் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாத்தி திரைப்படம் வெளியாகிவிடும் என்று அறிவித்திருந்தது படக்குழு. ஆனால் ஒரு சில பிரச்சனையின் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒத்தி வைத்தனர்.

இதனை தொடர்ந்து இந்த படத்தில் இருந்து வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருந்தது இந்த நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள வாத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கல்லூரி ஆசிரியராக இருக்கும் தனுஷுக்கு நேரும் பலவித சிக்கல்களை எப்படி நீக்குகிறார் மற்றும் அந்த கல்லூரி மாணவர்களை எப்படி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்பதே இந்த படத்தின் கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் வாத்தி திரைப்படம் அதை சரி கட்டி விடும் என்று தனுசு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் இதனை தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடிகர் தனுஷ் அவர்கள் பிஸியாக இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்த.

அது மட்டுமல்லாமல் கேப்டன் மில்லர் திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது இந்த நிலையில் கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி திரைப்படம் ரிளிஷுக்காகரசிகர்கள் மிகுந்த ஆரவாரமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதோ வாத்தி படத்தின் டிரைலர்.