ரூபாய் 200 கொடுத்தாள் நடிகை ஸ்ரேயாவுடன் நீங்கள் நடனம் ஆடலாம்!! உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி.!!

You can dance with actress Shreya saran for Rs 200: ஸ்ரேயா சரண் இவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் முதலில் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி கன்னடம், மலையாளம், ஆங்கிலம், போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இதனைதொடர்ந்து எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

2005ஆம் ஆண்டு ஜெயம் நடிப்பில் வெளியான மழை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபலமடைந்தார். மேலும் இப்படத்தின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இவர் திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, புலி,  சிக்கு புக்கு, போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது கொரோனா நிவாரண நிதிக்காக நிதி திரட்டும் வகையில் சென்னையில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடன் சேர்ந்து ஆட விரும்பும் நபர் 200 ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக ஆன்லைன் மூலம் செலுத்தி அதன் ஸ்கிரீன் ஷாட்டை தனது சமூகவலைதள பக்கத்திற்கு அனுப்புமாறு கேட்டுள்ளார்.

அப்படி அனுப்புவர்களிலிருந்து சிலரை தேர்ந்தெடுத்து அவருடன் டான்ஸ்  மட்டுமின்றி யோகா செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.  இதனை அறிந்த  அவரது ரசிகர்கள் வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ 200 ரூபாய் கொரோனாவிற்கு நிதி கொடுத்தது போன்று இருக்கட்டும் என பணம் அனுப்பி வைக்கிறார்களாம். அந்த அதிஷ்டசாலி நீங்களா கூட இருக்கலாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment