வடிவேலு நடிக்க வேண்டிய படத்தை தட்டி தூக்கிய யோகிபாபு!! இதோ, பேய் மாமா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

0

yogibabu pei mama movie first look poster: தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன் விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் அறிமுகமானவர். இவரின் நடிப்பு திறமைக்கு தற்போதுஇவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் நடித்துள்ள திரைப்படம் பேய் மாமா இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த படத்தை இவருக்கு பதிலாக ஏற்கனவே வேறொருவர் நடிக்க இருந்தது அவர் வேறு யாரும் இல்லை வைகைப்புயல் வடிவேலு தான். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக வலம் வந்தவர் தான் நடிகர் வைகை புயல் வடிவேல் சமீபகாலமாக எந்த படங்களில் நடிக்காமல் இருந்தாலும் மீம் கிரியேட்டர்கள் இவரை மீம்ஸ் மூலம் நகைச்சுவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்போது பேய்மாமா, இரண்டாம் புலிகேசி போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இந்த இரண்டு படங்களும் கொரோனா காரணமாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பேய்மாமா படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகி பாபு நடித்துள்ளார். இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தளத்தில் வைரலாகிறது. இதற்கு காரணம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளார்.

சமீபகாலத்தில் டுவிட்டரில் இந்தி தெரியாத போடா இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. இதற்கு காரணம் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்தி தெரியாத போடா என்ற டயலாக்கை வைத்து எனக்கு இந்தி, தமிழ், தெலுங்கு எதுவுமே தெரியாது போடா என குறிப்பிட்டுள்ளது. இதில் கொரோனா தடுப்பு மருந்தோட வருவோம் எனக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.