எந்த ஒரு முன்னணி நடிகருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடையாது.! ஒரே நாளில் நான்கு திரைப்படங்கள் ரிலீஸ்

0
yogibabu
yogibabu

தமிழ்சினிமாவில் எந்த ஒரு பின்னணி இல்லாமலும், அழகு இல்லாமலும், தனது முழு திறமையால் முன்னணி நகைச்சுவை நடிகர் லிஸ்டில் இடம் பிடித்தவர் யோகி பாபு.. இவரின் பரட்டை முடியும் பாடி லாங்குவேஜ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

நடிகர் யோகிபாபு முதலில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அதன் பிறகு முழுநேர காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார், அதுமட்டுமில்லாமல் சோலோவாக சில திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இவரை முன்னணி காமெடியனாக அதிக திரைப் படத்தில் கமிட் செய்து வருகிறார்கள்.

மேலும் யோகி பாபுவிற்கு ஒரே நாளில் நான்கு திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. சுந்தர் சியின் இருட்டு, தமன்னா நடித்த பெட்ரோமாக்ஸ், வருண் நடித்த பப்பி, மற்றும் பட்லர் பாபு, ஆகிய திரைப்படங்கள் வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி திரைக்கு வரும் என கூறியுள்ளார்கள்.