சீரியலில் நடித்துள்ள யோகிபாபு எந்த சீரியலில் தெரியுமா.? இணையதளத்தில் வைரலாகும் மாஸ் தகவல்

வெள்ளித்திரையில் ஒரு நடிகர் நடிக்க வேண்டுமென்றால் முதலில்  சின்னத்திரையில் தான் நடித்திருப்பார்கள் அந்த வகையில் சிவகார்த்திகேயன்,சந்தானம் என சொல்லிக்கொண்டே போகலாம் மேலும் அந்த வகையில் வந்த நடிகர் தான் யோகி பாபு.

இவர் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் காமெடி நடிகனாக இருந்து நடித்து பின்பு கதாநாயகனாக தற்போது வலம் வருகிறார் இவர் நடிப்பில் வெளியான கூர்கா,தர்ம பிரபு போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதேபோல் யோகி பாபு மண்டேலா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மண்டேலா திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று தான் ரசிகர்களுக்கு சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டது இந்த ட்ரைலரில் யோகி பாபு அட்டகாசமாக நடித்திருப்பார்.

இந்நிலையில் யோகி பாபுவை பற்றிய ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது ஆம் அந்த தகவல் என்னவென்று கேட்டால் யோகி பாபு சின்னத்திரையில் முதலில் லொள்ளு சபாவில் நடித்துள்ளாராம் அதற்கு முன்பு மை நேம் இஸ் மங்கம்மா என்ற சீரியலில் யோகி பாபு நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த தகவல் தற்பொழுது யோகி பாபு ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

yoki babu
yoki babu

Leave a Comment