யோகி பாபு ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருக்கும் சின்னத்திரை நடிகை.!

தமிழ் சினிமாவில் காமெடி கதாநாயகனாக கலக்கி வரும் யோகி பாபு மற்றும் சின்னத்திரையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தர்ஷா குப்தா இருவரும் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

வடிவேலு,செந்தில், கவுண்டமணி அவர்களுக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் யோகி பாபு. இவரின் யதார்த்த நடிப்பு ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது.

இவர் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இவர் நடிக்க உள்ள திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷிகா குப்தா நடிக்க இருக்கிறாராம். அதாவது சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த தனது இன்ஸ்டாகிராம் இல் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அவர்தான் இவர்.

இவ்வாறு பிரபலமடைந்த அவருக்கு சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் தற்போது நடிகர் யோகிபாபு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.இவர்கள் நடிக்க வைத்து திரைப்படத்தை இயக்குனர் ஜான்சன் இயக்கவுள்ளார். மேலும் இத்திரைப்படத்திற்கு “மெடிக்கல் மிராக்கல்” என பெயர் வைத்துள்ளார்கள்.

இத்திரைப்படத்தை ஏ1 நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும்,முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்தே இத்திரைப்படம் உருவாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.இத்திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு ஓலா டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகை தன்ஷிகா நடிக்கவுள்ளார். இவர்களை தொடர்ந்து இத்திரைப்படத்தில் ஏராளமான சின்னத்திரை பட்டாளங்கள் நடிக்க உள்ளார்கள்.

Leave a Comment