புகைப்படம் எடுப்பது யார் என்று தெரிகிறதா.? Throwback புகைப்படத்தை வெளியிட்ட யோகி பாபு.!

0

தமிழ்சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முழுநேர நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகிபாபு, இவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப் படத்தில் நகைச்சுவையில் நடித்துள்ளார்.

யோகிபாபு தற்பொழுது அஜீத்துடன் வலிமை திரைப்படத்திலும், சிவகார்த்திகேயனுடன் அயலான் திரைப்படத்திலும், விஜய்சதுபதியுடன் கடைசி விவசாயி, தனுஷுடன் கர்ணன் மற்றும் ட்ரிப் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார், யோகிபாபு 2009 ஆம் ஆண்டில் ஒரே ஒரு திரைப்படத்தில் தான் நடித்தார் ஆனால் 2019ம் ஆண்டில் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருமாறி உள்ளார்.

நகைச்சுவை நடிகர் யோகிபாபு முதன்முதலில் சின்னத்திரையில் தான் அறிமுகமானார். அதன் பிறகு தனது அயராத உழைப்பால் இன்று மிகப் பெரிய நகைச்சுவை நடிகராக இருக்கிறார். என்பது பலருக்கும் யோகி பாபு சமூகவலைதளத்தில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத ஆல் ஆனாலும் ஒரு சில பதிவுகளை பதிவடுவது உண்டு..

அந்தவகையில் யோகிபாபு சமீபத்தில் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார், அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மொட்டை ராஜேந்திரனுடன் யோகிபபு புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார் ஆனால் அந்த புகைப்படத்தை யார் எடுத்தார் என்பது தான் இங்கு உற்று நோக்க வேண்டிய விஷயம்.

ஏனென்றால் அந்த புகைப்படத்தை வேதாளம் படத்தில் அஜித்துடன் நடித்த பொழுது எடுத்த புகைப்படம் அப்போது தல அஜித் அவர்கள் மொட்டை ராஜேந்திரன் மற்றும் யோகிபபு இருவரையும் ஒன்றாக அமரவைத்து புகைப்படத்தை எடுத்துள்ளார் அஜித் தற்போது அந்த புகைப்படத்தை யோகிபபு தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.