ஷாருக்கானை பற்றி புகழ்ந்து பேசிய யோகி பாபு..! ஜவான் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யம்..

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக இருப்பவர் யோகி பாபு இவர் ஹீரோ , காமெடி என்ன இரண்டிலும் நடித்து வெற்றி கண்டு வருகிறார். அதோடு மட்டும் தனது பயணத்தை நிறுத்திக் கொள்ளாமல் ஒரு புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார்  யோகி பாபு. இவர் காமெடி கலந்த ஒரு திரை கதையை எழுதி வைத்திருக்கிறாராம்..

தயாரிப்பாளர்கள் கிடைத்தால்  அந்த படத்தை இயக்குவேன் என சொல்லி இருக்கிறார்.  இதனால் யோகி பாபு மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணமே இருக்கிறது. இப்போ பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் அதில் ஒன்றாக இளம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் டாப் ஹீரோ ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான்.

படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் யோகி பாபு. இந்த படத்தில் ஆவலுடன் கைகோர்த்து நயன்தாரா, பிரியாமணி, சானியா மல்கோத்ரா மற்றும் பலர் நடித்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலவியில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஷாருக்கான் குறித்து அவர் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் யோகி பாபு அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

அதாவது யோகி பாபு ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றாராம்.. அங்கே படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கான் யோகி பாபுவை பார்த்தது வெல்கம் பேக் டு பாலிவுட் குட் ஆப்டர் 12 இயர்ஸ் என கூறி வணக்கம் வைத்து வரவேற்றாராம்..

பல வருடங்களுக்கு முன்பு சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் யோகி பாபு ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்தனை வருடங்கள் கழித்து ஷாருக்கான் மறக்காமல் ஞாபகம் வைத்து யோகி பாபுவை வரவேற்றாராம். அவரும் ஒரு நிமிடம் அப்படியே ஆச்சரியப்பட்டு போனாராம் இதனை அவரே பேட்டியில் வெளிப்படையாக கூறினார்..

Leave a Comment