தமிழ்சினிமாவில் காமெடி நடிகனாக அறிமுகமாகி தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு, இவர் அடிமட்டத்திலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்தை பிடித்துள்ளார், தற்போது இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கி வருகிறார்.
இவர் தற்பொழுது மூன்று லட்சம் வரை ஒரு நாளுக்கு சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார், அதேபோல் காமெடி நடிகர் யோகிபாபு யாரையும் காப்பி அடித்து எடுக்காமல் தனக்கே உரித்தான ஸ்டைலில் காமெடியில் கலக்கி வருகிறார், இவர் ஒன்லைன் காமெடியில் கலக்குவார்.
இந்தநிலையில் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் இவர் தற்போது ஹீரோவாக ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது, இவர் ஹீரோவாக நடித்த கூர்க்கா திரைப்படம் மற்றும் தர்ம பிரபு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது இந்த நிலையில் பா ரஞ்சித் ஆர்யாவை வைத்து சல்பேட்டா பரம்பரை என்ற திரைப்படத்தை இயக்க ரெடியாகி விட்டார்.
ரஞ்சித் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் படத்தை தயாரித்தும் வருகிறார் இவர் தயாரிப்பில் வெளியாகிய பரியேறும் பெருமாள் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றது, இவர் தயாரிக்கும் திரைப்படத்தை நீலம் புரடக்ஷன் என்ற பெயரில்தான் தயாரித்து வருகிறார், இந்த நிலையில் யோகி பாபுவை வைத்து புதிய திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் தான் இயக்க இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்க இருக்கிறார், இந்த ஊரடங்கு தளர்வு முடிந்ததும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.