ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு இணையும் படம் .!! டைட்டில் வேற லெவல்!!

தற்பொழுது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.  அந்த வகையில் தற்போது மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற தீ கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்ய உள்ளது.

இத்திரைப்படத்தில் மலையாளத்தில் நடிகை நிமிஷா ஷாஜயன் நடிப்பில் ஜோ பேபி என்ற இயக்குனர் இப்படத்தை இயக்கியிருந்தார்.இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அமோக வெற்றி பெற்றதால் தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்து உள்ளார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சில வாரங்களாக நடைபெற்று வரும் வகையில் தற்பொழுது யோகிபாபு இணையவுள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

தற்பொழுது தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக பாடகி சின்மயின் கணவர் ராகுல் ரவிச்சந்திரன் நடித்து வருகிறார்.  இப்படத்தை ஆர் கண்ணன் இயக்கி வருகிறார்.

இவர்களை தொடர்ந்து தற்போது யோகிபாபு இப்படத்தில் களமிறங்க உள்ளார். இதனைத்தொடர்ந்து யோகிபாபு தளபதி 65 திரைப்படத்திலும் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்திற்காக யோகிபாபு ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

yogibabu-aishwaryarash142021m1
yogibabu-aishwaryarash142021m1

எனவே இவர் தளபதி 65 திரைப்படத்தின் இவரின் சம்பளம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் நிலையில் தற்பொழுது தீ கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்திலும் இணைந்துள்ளார்.

Leave a Comment