நயா பைசா கூட சம்பளமே இல்லாமல் நடித்துள்ள யோகி பாபு.!ஆனால் இன்று ஒரு நாளைக்கு 10 லட்சம்.!

தமிழ் சினிமாவில் தற்பொழுது அனைத்து முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள், ரசிகர்கள் என்று அனைவரின் பேவரட் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் யோகிபாபு. காமெடியில் முன்னணி நடிகர்களான வடிவேலு, செந்தில், கவுண்டமணி போன்ற நடிகர்களின் அளவிற்கு தற்போது இவரும் சினிமாவில் உயர்ந்துள்ளார்.

இவர்களைப் போன்று தற்போது வெளிவரும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு காமெடி நடிகராக நடித்து வருகிறார். இவரின் கரடுமுரடான தலை அமைப்பு, குட்டையான கட்டையான உடல் அமைப்பை வைத்து அனைவரும் இவரை கிண்டல் செய்து வந்தார்கள். யோகி பாபு கூட பல பேட்டிகளில் இதனைப் பற்றி கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட இவர் தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பினாலும் சிறந்த காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர் ஹீரோவாக நடித்திருந்த மண்டேலா திரைப்படம் ஓடிடி வழியாகவும், தொலைக்காட்சிகளிலும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் பெருந்தன்மையாக நடித்துள்ளாராம்.ஆம், அது எந்த படம் என்பதை பற்றி தற்போது பார்ப்போம். நாயே பேயே என்ற திரைப்படத்தில் யோகி பாபு தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிறகு கால்ஷீட் பிரச்சனையினால் இவரால் நடிக்க முடியாமல் போனது எனவே இவருக்கு பதிலாக முருகதாஸ் என்பவர் நடித்திருந்தார். எனவே யோகி பாபு ஏதாவது இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பாடலில் நடனம் ஆடிவுள்ளார்.அதற்க்கா யோகி பாபு சம்பளமாக ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்து தந்தாராம். இவ்வாறு ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்துவந்த யோகிபாபு தற்பொழுது யோகி பாபு ஒரு திரைப்படத்திற்கு 10 லட்சம் சம்பளமாக வாங்கிங்ரார்.

Leave a Comment