இந்திய அணி தோல்வியை தாங்கமுடியாமல் அழுத ரோஹித் ஷர்மா.! வைரலாகும் வீடியோ

0
rohit
rohit

இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் மழை குறுக்கிட்டதால் இரண்டு நாட்களாக போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் இந்தியா தோற்றது அதனால் ரோகித் சர்மா கண் கலங்கிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது அதனால் 47 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் நியூஸிலாந்து எடுத்து இருந்தது அதன் பிறகு மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

தொடர் மழையால் நிறுத்தப்பட்ட ஆட்டம் ரிசர்வ் டேவில் மீண்டும் தொடங்கியது பின்பு பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 239 ரன்கள் எடுத்திருந்தது 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணி 221 ரன்களில் ஆல் அவுட் ஆனது இதில் முக்கிய விக்கெட் ஆன, ரோகித், விராட் கோலி ராகுல் ஆகியோர்கள் ஒரு ரன்கள் எடுத்து விக்கெட் ஆனது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது ரசிகர்களிடம்.

இந்த போட்டியில் இந்தியா தோற்றதால் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது இந்திய அணி, தோல்வி அடைந்த நிலையில் பெவிலியனில் நின்றுகொண்டிருந்த ரோகித் சர்மா அதை தாங்க முடியாமல் கண் கலங்கினார் இந்த வீடியோ இணையதளத்தில் படுவேகமாக பரவி வருகிறது இதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆதரவாக டுவிட் செய்து வருகிறார்கள்.