வெஸ்ட் இண்டீசை சொற்ப ரன்களிலேயே சுருட்டிய இந்தியா.! அபார வெற்றி

0
dhoni
dhoni

உலகக்கோப்பை போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இங்கிலாந்தில், நேற்றைய போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக்கொண்டன, இது 34 வது லீக் போட்டியாகும், இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அப்போது தொடக்க வீரரான ரோகித் சர்மா, ராகுல் களமிறங்கினார், அதன்பிறகு ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்தார், அதேபோல் ராகுல் 20 ஓவரில் 48 ரன்களில் அவுட்டானார். இப்படி பேலன்ஸ் இல்லாமல் இருந்தது இந்திய அணி அதன் பிறகு களமிறங்கிய விராட் கோலி அரைசதத்தை கடந்தார்.

மேலும் கோலி சாதத்தை கடப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் 72 ரன்களில் ஆட்டமிழந்தார் அதன் பிறகு டோனி பாண்டியா இருவரும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் தோனி தனது அதிரடியால் அரைசதத்தை கடந்தார் பின்பு கடைசி ஓவரில் வழக்கம்போல் சிக்சர்களை பறக்க விட்டார்.

இந்நிலையில் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 268 ரன்கள் எடுத்திருந்தது 269 எடுத்தாள் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது, இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல்  வெஸ்ட் இண்டீஸ்  அணி திணறியது அதனால் அடுத்தடுத்து மடமடவென விக்கெட் சரிந்தது அதனால் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் தூக்கியத்தால்  143 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. மேலும் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.