ரோகித் ஷர்மாவின் ருத்ரதாண்டவம்.! பழிதீர்த்தது இந்திய அணி

0
rohit sharma
rohit sharma

வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு உள்ளது இதில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்பொழுது இரண்டு அணிகளுக்கு இடையே டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது இதில் முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றதால், அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆடியது.

இந்நிலையில் நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனையடுத்து வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது, ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக ஆடிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி துவக்க வீரரான ரோகித் சர்மா ருத்ர தாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார், கெட்டவனும் சிறப்பாக ஆடினார் ரோகித் சர்மா 43 பந்துகளுக்கு 85 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் அடுத்ததாக ஷிகர் தவான் 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து விக்கெட் ஆனார். இதனையடுத்து இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.