என்னை அறிந்தால் திரைப்படத்தில் என்னோட காட்சியை வெட்டி விட்டார்கள் புலம்பும் பிரபல நடிகர் நீக்கப்பட்ட காட்சி இதோ.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்பொழுது வலிமை திரைப்படம் உருவாகிவருகிறது. இதுவரை படத்தில் அஜித் பைக்ரேஸ் காட்சிகள் கார்ரேஸ் காட்சிகளில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது,.

தல அஜித் நடிப்பு மட்டுமல்லாமல் பலதுறைகளில் சாதனை புரிந்து வருகிறார், அதேபோல் தல அஜித் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் அதில் கடந்த வருடம் வெளியாகிய விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை திரைப்படங்கள் நல்ல திரைவிமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.

இந்தநிலையில் 2015ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்குமார், திரிஷா, அனுஷ்கா செட்டி, அருண் விஜய் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சம்பத்ராம் அவரும் நடித்து இருந்தார் ஆனால் அவர் நடித்த காட்சிகள் வெளியாகவில்லை, நடிகர் சம்பத்ராம் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமடைந்தவர், இவர் முதலில் ஸ்டண்ட் நடிகராக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றி கூறினார்.

அதில் அவர் கூறியதாவது நான் தல அஜித்துடன் நிறைய படங்கள் நடித்து இருக்கிறேன். உன்னை கொடு என்னை தருவேன், தீனா, ரெட் போன்ற திரைப்படங்கள் உடன் நண்பராக நடித்துள்ளேன். அஜித்துடன் தீனா திரைப்படத்தில் நடிக்கும் பொழுது சண்டைக்காட்சி ஒன்றில் அஜித் என்னுடைய மார்பில் உதைப்பார் அப்பொழுது நான் கீழே விழுந்துவிட்டேன். அப்பொழுது அஜித் பதறிப்போய் என்னை தூக்கி நிறுத்தி ஸ்டண்ட் பயிற்சிகளை கற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு சேஃப்டி மற்றவர்களுக்கும் சேஃப்டி என டிப்ஸ் கூறினார்.

உடனே சம்பத் ராம் ஸ்டாண்ட் பயிற்சிகளை கற்று பின்பு நடிக்க ஆரம்பித்தார், இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தேன் என கூறினார், ஆனால் நான் நடித்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை, என்னுடைய இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் நான் நடித்த காட்சி வெளிவராதது என்றால் அது என்னை அறிந்தால் படத்தில் மட்டும்தான்.

நான் நடித்த காட்சி எடிட்டிங் செய்யும்பொழுது காட்சியை நீக்கி விட்டார்கள், என்னோட நடிப்பு மற்றும் நான் நடித்த காட்சி நன்றாக இருந்ததால் ட்ரைலரில் போட்டு விட்டார்கள். ஆனால் படத்தின் நீளம் காரணமாக என் காட்சியை நீக்கி விட்டார்கள். உடனே அஜித் அவர்கள் போன் செய்து உங்கள் காட்சி எடிட்டிங் வேலையில் நீக்கப்பட்டுவிட்டது நீங்கள் படம் பார்த்து விட்டு மனம் வருந்தக் கூடாது என கூறினார்.

ஆனால் அவருடைய காட்சி ட்ரெய்லரில் வந்ததால் சந்தோஷமாக இருந்தது. நான் ஒரு நாள் அஜித்துடன் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

Leave a Comment