என்னை அறிந்தால் இரண்டாம் பாகம்.! ரகசியத்தை வெளிப்படையாக கூறிய அருண்விஜய்.!

நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவில் முதன் முதலாக முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து இயக்குனர் சேரன் இயக்கிய பாண்டவர் பூமி என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார், பாண்டவர் பூமி திரைப்படம் குடும்பத் திரைப்படம், அதனால் ஒட்டுமொத்த மக்களும் படத்தை ரசித்துப் பார்த்தார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடித்து ஹிட்டான என்னை அறிந்தால் திரை படத்தில் அஜித்திற்கு வில்லனாக விக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படம் தான் அருண் விஜய்க்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது, இந்த திரைப்படத்திற்கு பிறகு அருண்விஜய் தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பிடித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அருண்விஜய் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார், அந்த பேட்டியில் அவர் கூறியதாவது என் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு திரைப்படங்கள் என்னை அறிந்தால் மற்றும் தடையறத் தாக்க, இந்த இரண்டு திரைப்படங்களையும் பார்ட்-2 பண்ணவேண்டும் என தனது ஆசையை அறிவித்தார்.

மேலும் என்னை அறிந்தால் திரைப்படத்தில் விக்டரை சுட்டதை நீங்கள் யாரும் பார்க்கவில்லை விக்டர் இறந்தாரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது அங்கு என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாது, தல அஜித் அதற்கான வாய்ப்பை கொடுத்தால் என்னை அறிந்தால் 2 எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம் என பல நாள் ரகசியத்தை ஓபனாக பேசினார்.

Leave a Comment