சீரியலில் களமிறங்கும் யாஷிகா.! ஒரு எபிஸோடுக்கு சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா.?

இளம் நடிகைகளில் தற்போதைய இளம் கவர்ச்சி நடிகையாக  வலம் வந்து கொண்டிருப்பவர் யாஷிகா(yashika anand) ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே சிறிய கதாபாத்திரத்தில் தனது சினிமா வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவர் இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். எனவே ரசிகர்கள் இவரை திட்டி வருகின்றன.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவின் காரணமாக சினிமாத்துறை முழுவதும் முடங்கிக்டைக்கிறது. இந்த நிலையில் 60 பேர் மட்டுமே சின்னதிரை படபடிப்பில் நடிக்கலாம் என அனுமதிக்கப்பட்டிருந்தது ஆனால் தற்பொழுது சென்னையில் உச்சகட்டமாக கோரோனா பாதிப்பு உள்ளது இதன் காரணமாக 30ம் தேதிக்கு பிறகு படப்பிடிப்புகள் மீண்டும் தொடரும் என செய்திகள் வெளிவந்துள்ளது.

roja serial
roja serial

இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் நடிக்க யாஷிகா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த சீரியல் 500 எபிசோடு படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது மேலும் ரோஜா சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த சீரியலில் யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம் ஒரு எபிசோடுக்கு இவருக்கு ஒன்றரை லட்சம் சம்பளமாம். ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் யாஷிகாவை காணமுடியும்.

Leave a Comment