சத்தமே இல்லாமல் திருமண அறிவிப்பை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்.!

நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடைய திருமண அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு கவர்ச்சி நடிகை என்ற பெயர் கிடைத்தது.

ஆனால் எப்படியாவது இந்த பெயரை மாற்ற வேண்டும் என தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிவரை சென்றார். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்ததே தவிர இவரின் பெயரை மாற்ற முடியவில்லை.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார் அவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோ விற்க்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கும். இந்த நிலையில் சமீபத்தில் யாஷிகா ஆனந்த் சில மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் தன்னுடைய நெருங்கிய தோழியை பறிகொடுத்தார்.

இது அவருக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்தது அதுமட்டுமில்லாமல் யாஷிகா ஆனந்த் அவர்களுக்கும் அடிபட்டது. அதனால் மருத்துவமனையில் யாஷிகா ஆனந்த் ட்ரீட்மென்ட் எடுத்து வந்தார். மருத்துவமனையிலிருந்து வெளிவந்த யாஷிகா ஆனந்த் மீண்டும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வழக்கம்போல் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட ஆரம்பித்தார்.

இந்த நிலையில் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டகிராம் ஸ்டோரியில்  தனது திருமண அறிவிப்பு பற்றி அறிவித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். என்னுடைய அம்மா மற்றும் அப்பா இருவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.

இதுதான் நான் செட்டில் ஆவதற்கு சரியான நேரம் எனக்கு சினிமா மிகவும் பிடிக்கும் என்பதால் தொடர்ந்து சினிமாவில் நடித்து உங்களை மகிழ்விப்பேன் . அதேபோல் எனக்கு லவ் செட் ஆகாது அதனால் பெற்றோர் நிச்சயம் செய்தவரையே திருமணம் செய்ய போகிறேன். எனவே உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எனக்கு தேவை என தெரிவித்துள்ளார்.மேலும் ரசிகர்களிடையே யார் அந்த மாப்பிள்ளை என கேள்வி எழும்பியுள்ளது.

அதேபோல் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

yashika ananth
yashika ananth

Leave a Comment