புஷ்பா பட பாடலுக்கு தனது பாணியில் மரண குத்து குத்தும் யாஷிகா ஆனந்த்.! வீடியோவைப் பார்த்து சிலகித்த ரசிகர்கள்

yashika ananth
yashika ananth

நடிகை யாஷிகா இந்திய திரைப்பட நடிகையாக வலம் வருபவர் இவர் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தான் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதாள்  அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் 2018 ஆம் ஆண்டு வெளியாகிய இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் அடல்ட் காமெடி திரைப்படமாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது ஆனால் யாஷிகா ஆனந்த் அவர்களை ரசிகர்கள் கவர்ச்சி பொருளாகவே பார்க்க ஆரம்பித்தார்கள்.

எப்படியாவது ரசிகர்களின் பார்வையை திசைதிருப்ப வேண்டும் என்பதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 2 கலந்து கொண்டார். யாஷிகா எதிர்பார்த்ததுபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன் மீதும்  இருக்கும் ரசிகர்களின் கண்ணோட்டத்தை மாற்றினார்.

அதன்பிறகு நோட்டா, கழுகு-2 ஆகிய திரைப்படங்களிலும் நடித்து இருந்தார். யாஷிகா அவர்களுக்கு சமிபத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது அதன் பின் ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார் எழுந்திருக்கவே முடியாத நிலையில் இருந்து யாஷிகா தற்பொழுது படிப்படியாக குணமாகி மீண்டும் பழைய நிலைமைக்கு மாறியுள்ளார்.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபகாலமாக நடிகைகள் பலரும் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் ரீல் செய்து வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள். அதிலும் அல்லு அர்ஜுனும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய புஷ்பா திரைப்படத்தின் பாடலுக்கு தான் பல நடிகைகள் வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.

அதேபோல் யாஷிகா ஆனந்த் அவர்களும் புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள சாமி சாமி பாடலுக்கு தனது பாணியில் ஆட்டம் போட்டு பாவாடை தாவணியுடன் வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இதற்கு முன் இதே பாடலுக்கு ஷாலு ஷம்மு அவர்களும் வீடியோவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.