இந்த பேய், ஆன்மா இது மேலலா உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா.? மிரட்டலாக உருவாகி இருக்கும் யாஷிகா ஆனந்தின் ‘சைத்ரா’ பட ட்ரெய்லர் இதோ..

நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஹாரர் படமான ‘சைத்ரா’ பட டிரைலர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது மார்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கே மனோகரன் மற்றும் டி கண்ணன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் தான் சைத்ரா என்ற ஹாரர் திரைப்படம்.

இந்த படத்தில் ஹீரோயினாக யாஷிகா ஆனந்த் நடித்திருக்கும் நிலையில் இவரைத் தொடர்ந்து அவித்தேஷ் சக்தி, மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்து இருக்கும் நிலையில் மணிகண்டன், விஜயலட்சுமி ஆகியோர்களது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைத்திருக்கிறார்.

மேலும் இவர்களைத் தொடர்ந்து பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் எடிட்டிங் பணியை மேற்கொண்டுள்ளார். இவ்வாறு 24 மணி நேரம் நடக்கும் கதையை மையமாக வைத்திருக்கும் இந்த படம் முழுக்க முழுக்க ஹாரர் படமாக உருவாகியுள்ளது.

யாஷிகாவும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலரை தற்பொழுது படக்குழு வெளியிட நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை பட குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு யாஷிகாவின் நடிப்பில் சைத்ரா படம் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

Leave a Comment