நிரூப் தனது முதுகில் குத்தியது போல் பேட்டி அளித்த யாஷிகா ஆனந்த்.! வைரலாகும் தகவல்..

YASHIKA-ANAND
YASHIKA-ANAND

தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் சமீபத்தில் தனது லவ் பிரேக்கப் பற்றி இவர் கூறிய பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் பஞ்சாப் மாடல் அழகி என்பது குறிப்பிடத்தக்கது மேலும் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் இருந்து பட்டத்தை பெறவில்லை என்றாலும் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.இதன் மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம் உருவானது இந்நிகழ்ச்சிருக்கு பிறகு ஏகப்பட்ட திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்த இவர் மிகப்பெரிய விபத்து ஒன்று நடைபெற்றது.அதில் இவருடைய தோழி சம்பவ இடத்திலேயே உயிர் இறந்தார் இவர் படுகாயங்களுடன் தப்பித்தார்.

இதன் காரணமாக சில மாதங்களாக பெரிதாக திரைப்படங்கள் நடிக்காமல் இருந்த அந்த நிலையில் சமீப காலங்களாக மேலும் நிகழ்ச்சிகளில் மற்றும் படங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகிறார் இப்படிப்பட்ட நிலைகள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட இவருக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் இவர் முன்னை போல் இருக்க முடியாது என்பதற்காக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

மேலும் யாஷிகா ஆனந்த் மற்றும் பிக்பாஸ் நீருப் இருவரும் காதலித்திருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் மேலும் இவர்கள் சில காரணங்களால் பிரிந்து விட்டார்கள் என்பதும் தெரியும். இப்படிப்பட்ட நிலையில் இவர்களுடைய உறவினை பற்றி தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் தற்பொழுது எப்பொழுதும் போல் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று நிரூப் கூறினார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் யாஷிகா ஆனந்த் நான் சொன்ன டயலாக்கை அவருடைய சொந்த டயலாக் போல் பேசியிருந்தார். பாய் ஃப்ரெண்ட் கேர்ள் ஃபிரண்டாக இருப்பதெல்லாம் லவ் கிடையாது முதுகில் குத்தினாலும் அவர்களுக்கு நல்லவது செய்து விட்டு போக வேண்டும், பிரேக்கப்புக்கு நிறைய காரணங்களை சொல்லலாம் ஆனால் அதில் மிக முக்கியமானது என் மனம் காயப்பட்டது  என்று யாஷிகா தெரிவித்துள்ளார் இவ்வாறு இவர் கூறியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.