கோடிகளில் சம்பளம் வாங்கும் மிரட்டும் நாயகன் யாஷ்.. KGF CHAPTER 2 படத்துக்கு எவ்வளவு வாங்கயுள்ளார் தெரியுமா.?

தமிழ் திரை உலகில் ஆண்டுதோறும் பல திரைப்படங்கள் வெளிவந்து மக்களை கவர்ந்தாலும் ஒரு சில பிற மொழிப் படங்களும் மக்களை கவர்வது வழக்கம்.

அப்படி கன்னட சினிமாவில் இருந்து வெளியான கேஜிஎப் திரைப்படம் அந்த மொழியைத் தாண்டி உலக அளவில் பெயர் பெற்றது

அது மட்டுமில்லாமல் வசூலில் வாரி குவித்தது. இதன் காரணமாகவே படக்குழுவினர் இரண்டாவது பாகத்தை எடுக்க தொடங்கினர்.

இந்தப் படத்திலும் அதிரடி நாயகனாக யாஷ் நடித்துள்ளார். இரண்டாம் பாகம் லாக் டவுன்னுக்கு முன்பே தொடங்கப்பட்டாலும்  பல்வேறு விதமான தடைகளால் சமீபத்தில்தான் இறுதிகட்ட படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டது.

சமீபத்தில்கூட யாஷ் பிறந்தநாளன்று திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

யாஷ் KGF 2 திரைப்படத்திற்காக சுமார் 30 கோடி சம்பளம் வாங்கியதாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு குறைவான சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த யாஷ். கேஜிஎப் திரைப்படம் அவரது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிப் போட்டு உள்ளது.

yaash

Leave a Comment

Exit mobile version