ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த கே ஜி எப் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

சமீபகாலமாக கன்னட சினிமா அடுத்த லெவலை நோக்கி பயணிக்கிறது, இதற்கு முன் வெளியாகிய கே ஜி எஃப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களும், ஏன் தமிழ் ரசிகர்களும் விரும்பிப் பார்த்த திரைப்படம். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 215 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

கர்நாடகாவை தாண்டி தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வசூலில் கல்லா கட்டியது, அதுமட்டுமில்லாமல் டிஜிட்டல் தளத்தில் அதிகம் பேர் பார்த்த திரைப்படமும் இவை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த திரைப்படம் கர்நாடகாவில் மட்டும் 120 கோடி வரை வசூல் செய்தது.

அதேபோல் பாலிவுட்டில் எந்த ஒரு பெரிய அளவில் பிரமோஷன் இல்லாமல் 45 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது கேஜிஎப் திரைப்படம், இதனைத் தொடர்ந்து தமிழில் நடிகர் விஷால் இந்த திரைப்படத்தை வெளியிட்டார், தமிழிலும் 7 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

கேஜிஎப் முதல் பாகம் மிகப்பெரிய சாதனை படைத்ததால் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார்கள் படக்குழு, அதேபோல் கேஜிஎப் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்தநிலையில் கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை மிகவும் பிரமாண்டமாக அறிவித்துள்ள படக்குழு ரிலீஸ் தேதி இதோ.

Leave a Comment