வசூலை வாரி குவிக்கும் “யானை திரைப்படம்” – இப்பவும் வருத்தத்தில் அருண் விஜய்..! என்ன காரணம் தெரியுமா.?

arun-vijay
arun-vijay

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து ஹீரோ, வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில்  ஜூலை ஒன்றாம் தேதி திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் யானை.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. யானை திரைப்படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து ராதிகா சரத்குமார், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரகனி மற்றும் பல பரபலங்கள் நடித்து இருக்கின்றனர்.

ஒவ்வொருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்துள்ளதால் ரசிகர்கள் அருண் விஜயையும் தாண்டி மற்ற நடிகர்களையும் புகழ்ந்து பேசி வருகின்றனர். யானை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 12 கோடியை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது .

வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை யானை படம் அள்ளும் என தெரிய வருகிறது. இதனால் படக்குழு செம சந்தோஷத்தில் இருக்கிறது ஆனால் அருண் விஜய் மட்டும் சற்று சோகத்தில் இருக்கிறார். காரணம் அருண் விஜய் மிகப் பெரிய ஒரு கணக்கு போட்டு உள்ளார்.

அதாவது யானை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சினம், பாக்சர் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தால் நாம் சினிமாவில் ஒரு உச்சத்தை தொட்டு விடலாம் என கணக்கு போட்டார் ஆனால் இந்த படம் வெளிவருவதற்கான சாத்திய கூறுகள் இல்லாமலேயே இருந்து வருகிறது இதனால் அருண் விஜய் சோகத்தில் இருக்கிறார்.