மண்ணை கவ்விய விஷால்… அஜித் பேச்சை கேட்டிருந்தால் இது நடந்திருக்குமா.? பரிதாப நிலையில் நயன்தாரா..

கமலஹாசன் நடிப்பில் உருவாகிய விக்ரம் திரைப்படம் வெளியவதற்கு முன்பே தமிழ் சினிமாவில் வெளியான பல திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை அந்த வகையில் ரஜினி நடிப்பில் உருவாகிய அண்ணாத்த, அஜித் நடிப்பில் வெளியாகிய வலிமை, விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் என தொடர்ந்து வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் எதிர்பாத்த வெற்றியை பெற முடியவில்லை.

வேறு மொழிகளில் வெளியாக்கிய ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் ஆகிய திரைப்படங்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.  இந்த திரைப்படங்கள் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் அந்த படத்தின் படக்குழுவினர் படம் வெளியாவதற்கு முன்பு ஒரு மாதமாக இந்திய முழுவதும் அவர்கள் செய்த பிரமோஷன் என பெரும் கருத்தை முன் வைத்தார்கள்.

உடனே இதே போல் தமிழ் சினிமா துறையில் பிரமோஷன் செய்தால் அந்த திரைப்படத்தை போல் மிகப் பெரிய அளவில் வெற்றி அடையும் என  பலரும் தங்களுடைய படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்ய ஆரம்பித்தார்கள் இதனைத் தொடர்ந்து கமலஹாசன் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு மாதமாக கமலஹாசன் இந்தியா முழுவதும் சென்று அந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து தமிழ் சினிமா தோல்வியை சந்தித்த வந்த காலகட்டத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது அதனால் தமிழ் சினிமா தலை நிமிர செய்தது என்று கூட கூறலாம். அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்கிற்கு வருவதற்கு முன்பே அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் இந்தியா முழுவதும் ஒரு மாதம் காலமாக அனைத்து பிரமோஷன் நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு வந்தார்கள்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது இந்த நிலையில் சினிமா எடுப்பது பெரிய விஷயம் கிடையாது ஆனால் அந்த திரைப்படத்தை புரமோஷன் செய்து மக்கள் மத்தியில் சேர்த்தால் தான் படம் ஹிட் அடையும் என பலரும் நம்பினார்கள் ஆனால் அஜித் போன்ற நடிகர்கள் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வருவதற்கு தவிர்த்தார். அதற்கு பல நடிகர் நடிகர்கள் இயக்குனர் தயாரிப்பாளர்கள் என பலரும் இதுபோல் முன்னணி நடிகர்கள் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை ஈட்டு தர  முடியும் எனகருத்து தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஷால் தற்பொழுது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் திரையரங்கிற்கு வந்துள்ளது இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என பல இடங்களுக்கு சென்று விஷால் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரமோஷன் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை விஷால்  சந்திப்பதாக கூட ஒரு தகவல் வெளியானது.

இந்த படம் தமிழகத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவியது கேரளாவில் வெளியான இந்த திரைப்படம் திரையரங்கிகளில் ஒரே ஒரு ரசிகர் மட்டும் டிக்கெட் எடுத்து படம் பார்க்க வந்திருந்ததால் ஒரே ஒரு ரசிகருக்கு படத்தை திரையிட முடியாது என அந்த ஷோவையே கேன்சல் செய்து விட்டதாக தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில்  நயன்தாரா நடிப்பில் வெளியாக்கிய கனெக்ட்  திரைப்படம் தோல்வியை தழுவியுள்ளது இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நயந்தாரா பல பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பொதுவாக நயன்தாரா எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை அஜித் வழியை அப்படியே பின்பற்றி வந்தார்.

விக்ரம், பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரமோஷன் நிகழ்ச்சிகளால் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியதால் நயன்தாரா தன்னுடைய கொள்கையை தகர்த்துக் கொண்டார் அதனால் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் என்னதான் விஷால் மற்றும் நயன்தாரா இருவரும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் இவர்கள் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது இந்த நிலையில் அஜித் சொன்னது போல் நல்ல திரைப்படத்திற்கு விளம்பரமே தேவையில்லை படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் படத்தை பார்க்க தேடி வருவார்கள் விளம்பரம் மட்டுமே அந்த படத்தின் வெற்றிக்கு காரணம் கிடையாது என அப்பொழுதே கூறியிருந்தார்.

அந்த வகையில் படம் நல்லா இருந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் தேடி வந்து பார்ப்பார்கள். அஜித் ஃபார்முலா தான் தற்பொழுது சினிமாவில் வெற்றி பெறும் என்பதை சினிமா துறையினர் உணர்ந்துள்ளார்கள்.

Leave a Comment