ஒரு கிலோ சீஸ் ரூ 78 ஆயிரம் அப்படி இதுல என்ன இருக்கு.! அதுவும் எங்கு தெரியுமா.?

0
150

இந்த சீஸ் அரிய வகையை சேர்ந்தது ஏனென்றால் இது கழுதை பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது உலகிலேயே அரிய வகை சீஸ் என்றால் அது இந்த சீஸ் தான், ஒரு சில வகை கழுதை இனம் அழிந்து வருவதால் அதன் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாகவே இந்த சீஸ் தயாரிக்கப்படுகிறது, அதுவும் செர்பியா நாட்டில் தான் அந்த கழுதை இனம் குறைந்து கொண்டே வருகிறது.பொதுவாக கழுதைப் பால் என்றாலே மிகவும் விலை உயர்ந்ததுதான். அதிலிருந்து தயாரிக்கப்படும் இந்த சீஸ் ஒரு கிலோ 78,530 ரூபாய்.

கழுதைப் பாலில் இருந்து சீஸ் தயாரிக்கும் இந்த குழு 2012 ஆம் ஆண்டு தனது முதல் சோதனை செய்ய முயற்சி செய்தது செர்பியாவின் வடபகுதியில் இருக்கும் ஸசாவிகா என்ற இடத்தில் ஸ்மிக் என்பவர்இந்த குழுவை தலைமையேற்று நடத்தி வந்தார் இந்த முதல் கட்ட சோதனையில் கிட்டத்தட்ட 200 கழுதைகளை பயன்படுத்தி அதன் பாலிலிருந்து சீஸ் தயாரிக்கப்படுகிறது. கழுதை பாலை பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பயன்படுத்தலாம் அதேபோல் கழுதைப்பால் ஆஸ்த்மா போன்ற தீவிர நோய்களுக்கு தீர்க்கும் ஆற்றலாக நம்பப்படுகிறது.

இருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் கழுதைப் பாலில் இன்னும் என்னவெல்லாம் நன்மைகள் இருக்கின்றன என்று கண்டறியும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். சில ஆராய்ச்சிகள், கழுதைப் பாலில் புரதச் சத்து அதிகமாக உள்ளது என்றும், மாட்டுப்பால் ஒத்துக்கொள்ளாதோருக்கு நல்ல மாற்று கழுதைப்பால் என்றும்
இந்தக் கழுதைப் பாலோடு ஆட்டுப் பாலும் சேர்க்கப்படுகிறது. ஏனெனில் ஒரு நாளைக்குக் கழுதைப் பாலின் அளவு மிகக் குறைவு என்பதால் அதை ஈடு செய்ய ஆட்டுப் பால் பயன்படுத்தப்படுகிறது என சிமிக் குழு கூறியுள்ளது.

தற்போது வருடத்திற்கு 15 கிலோ சீஸ் விற்கப்படுவதாகக் கூறியுள்ளது. இதனால் அழிவை நோக்கி நகர்ந்த இந்த கழுதை இனம், நல்ல லாபம் தருவதால், விவசாயிகள் உற்சாகமாக வளர்க்கத் தொடங்கியுள்ளனர் என்கிறார் சிமிக்.