உலக நாயகன் கமலஹாசன் – குவித்து வைத்திருக்கும் “சொத்து மதிப்பு” எவ்வளவு தெரியுமா.? வியப்பில் ரசிகர்கள்..!

உலக நாயகன் கமலஹாசன்  குழந்தையாக இருக்கும் போதே தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து விட்டார் அதன் பிறகு ஒரு கட்டத்தில் ஹீரோவாக தொடர்ந்து  ஹிட் படங்களை கொடுத்து ரஜினி போன்ற நடிகர்கள் வருவதற்கு முன்பாகவே அவர் ஒரு சூப்பர் ஸ்டாரக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாயகன் கமலஹாசன் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது மாறுபட்ட நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். அதேபோலவே தான் இப்பொழுதும் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் கடைசியாக நடித்த விக்ரம் வெறியாகி நல்ல விமர்சனத்தை பெற்றதன் காரணமாக மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக பார்த்தனர் அதன் காரணமாக இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக விக்ரம் திரைப்படம் 410 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மற்றொரு ஹிட் படத்தை கொடுக்க உலகநாயகன் கமலஹாசன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த மூன்று பிரம்மாண்ட இயக்குனர்களுடன் இவர் கைகோர்க்க இருக்கிறார் அந்த வகையில்  வினோத், மணிரத்தினம், லோகேஷ் போன்றவருடன் படம் பண்ண ரெடியாக இருக்கிறார்.

கமல் இப்படி இருக்கின்ற நிலையில் உலகநாயகன் கமலஹாசன் சொத்து மதிப்பு குறித்து தகவல்களை கிடைத்து உள்ளது அது குறித்து பார்ப்போம் உலக நாயகன் கமலஹாசனின் சொத்து மதிப்பு சுமார் 117 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது ஆனால் அவருடைய உண்மையான சொத்து மதிப்பு 400 கோடி கிட்டத்தட்ட இருக்கும் என சமூக வலைதள பக்கங்களில் அடிபடுகின்றன.. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.

Leave a Comment