தோனியை 7 வது இடத்தில் நான் தான் அனுப்பினேன் என்று உங்களுக்கு தெரியுமா.? முதன் முதலாக வாய் திறந்த பிரபலம்

0
dhoni
dhoni

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் உலக கோப்பையை வெல்லும் அணியாக இந்தியாவையும் கருதினார்கள், ஆனால் நியூஸிலாந்திடம் அரையிறுதிப் போட்டியில் இந்திய மோதி தோற்று வெளியேறியது, இதனால் பல கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவரும் அப்செட்டில் இருந்தார்கள்.

அந்தப் போட்டியில் 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 5 ரன்கள் எடுத்த நிலையில் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது, இந்த நிலையில் ரிஷப் பண்ட் களத்தில் இருக்கும்போது ஐந்தாவதாக தோனி அனுப்பாமல் தினேஷ் கார்த்திக்கை அனுப்பி மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக பலரும் கூறினார்கள். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பிறகாவது தோனியை அனுப்பவேண்டும் ஆனால் அப்பொழுதும் அனுப்பவில்லை.

தினேஷ் கார்த்திக் பிறகு பாண்டியா தான் களத்தில் இறங்கினார் ரிஷப் பண்ட் மற்றும் பாண்டியா இருவரும் இளம் வீரர்கள் என்பதால் இந்த சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்று தெரியாமல் அவசரப்பட்டு மிகப்பெரிய ஷாட் அடிக்க நினைத்து அவுட்டானார். இதுவே தினேஷ் கார்த்திக்கு பதிலாக தோனி அனுப்பப்பட்டிருந்தால் நன்றாகப் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்று இருப்பார் என்பது பல ரசிகர்கள் முதல் கிரிக்கெட் ஜாம்பவான்களின் கருத்தாக இருந்தது.

தோனியை ஐந்தாம் வரிசையில் இறக்கி ரிஷப் உடன் ஆட விட்டு இருக்க வேண்டும், என்று பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருத்து கூறினார்கள், இந்தநிலையில் தோனியை ஏழாவது இடத்தில் யார் அனுப்பினார்கள் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது விமர்சனங்கள் வைரல் ஆனது, அதுமட்டும் இல்லாமல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தோனியை ஏழாவது இடத்தில் இறங்கியதற்கு அதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்த தவறான முடிவை யார் எடுத்திருந்தார் என விவாதம் ஏற்பட்டது, அதற்கு வழக்கம்போல் ரவி சாஸ்திரி ஏழாவது இடத்தில் இறக்கியது சரியான முடிவுதான் என கூறினார், ஆனால் தோனியை ஏழாவது இடத்தில் இறங்கியதற்கு யாரும் முன்வரவில்லை. ஏழாவது இடத்தில் தோனியை ஏழாவது இடத்தில் இறக்கியது யார் என்று தேடியபோது பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தான் இறக்கினார் என பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் இது பற்றிய முதல் முறையாக வாய் திறந்துள்ளார் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார். அவர் கூறியதாவது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சூழலுக்கு ஏற்றவாறு தான் களமிறங்குவோம், அதுமட்டுமல்லாமல் போட்டி முடித்துவைக்க தோனி போன்ற சிறப்பான அனுபவமுள்ள ஆள் தேவை என்றுதான் அவரை ஏழாம் வரிசையில் அனுப்பினோம், ஆனால் இந்த முடிவை நான் மட்டும் தனியாக எடுத்த முடிவு கிடையாது அனைவரும் பேசி கலந்துரையாடி தான் இந்த முடிவை எடுத்தோம், ஆனால் இப்பொழுது நாம் மட்டும் தனியாக எடுத்த முடிவு என்பது போல் பேசுவது எப்படி உண்மையாகும் அது நான் ஒருவன் எடுத்த முடிவு போல் சித்தரிக்கக் கூடாது என சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.