இந்தியா தோற்றதை கிண்டல் செய்து வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகர்.! சரியான பதிலடி கொடுத்த ரசிகர்கள்.!

0
dhoni
dhoni

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் கோப்பையை இந்தியா வெல்லும் என அனைவரும் எதிர் பார்த்தார்கள் ஆனால் எதிர்பாராத விதமாக இந்திய அணி அரையிறுதியில் தோற்றது, இதனால் பல பிரபலங்கள் இந்திய அணிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள் இந்த நிலையில் பிரபல நடிகர் விவேக் ஓபராய் பதிவிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி அரையிறுதியில் மோதின, இதில் இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது, இதனால் இந்தியா நியூசிலாந்திடம் அரையிறுதிப் போட்டியில் தோற்றது இந்த தோல்வியிலிருந்து இன்னும் பலர் மீளவில்லை.

இந்திய அணியின் தோல்விக்கு பல்வேறு பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள், இந்த நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் இந்திய அணியை கிண்டல் செய்யும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் பெண்ணொருவர் எதிரில் வருவரை  கட்டி அணைப்பது போல் சென்று மற்றொருவரை அணைத்துக் கொள்வார்,.

இந்த வீடியோவை இந்திய அணியுடன் ஒப்பிட்டு இப்படித்தான் இந்திய ரசிகர்களுக்கும் நடந்தது என கிண்டலாக பதிவிட்டு இருந்தார் விவேக் ஓபராய் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரசிகர்கள், எப்படி ஐஸ்வர்யாராய் உங்களை விட்டு அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டவர் அது போலவா இருக்கிறது என்று விவேக் ஓபராய்க்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.