குயின்ஸ் லேண்டை போல் ராட்டினம் அறுந்து விழுந்ததால் மக்கள் கதறல்.! வீடியோ உள்ளே

0
Wonder-La
Wonder-La

சென்னையில் உள்ள குயின்ஸ் லேன்ட் பொழுதுபோக்கு பூங்கா விபத்துக்குள்ளானது சமீபத்தில் அதே போல் பெங்களூரில் உள்ள தனியார் ராட்டினம் கீழே விழுந்து மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதில் இருந்த பயணிகள் கதறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் சென்னையில் குயின்ஸ் லேன்ட் பூங்காவில் பெரும் விபத்து ஏற்பட்டது அதனால் அதை மூடுவதற்கு சமீபத்தில் உத்தரவிட்டார்கள், இந்த நிலையில் இதே போல் கோரச் சம்பவம் பெங்களூரில் நடைபெற்று உள்ளது பெங்களூரில் உள்ள தனியார் பூங்காவான ஒண்டர்லாவில் உள்ள ராட்டினத்தில் பலர் ஏறி அமர்ந்து சுற்றியுள்ளார்கள்.

இந்த நிலையில் கீழே இறங்கும் போது திடீரென ஏற்பட்ட விபத்தால் ராட்டினத்தில் இருந்த மக்களின் கால் சிக்கிக்கொண்டது, பின்பு ராட்டினத்தை மேலே தூக்கி மக்களை காப்பாற்றினார்கள் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.