பாடலே இல்லாமல் ஹிட் அடித்த திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்.!!

தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் அடிக்க வேண்டும் என்றால் திரில்லர், ஆக்சன், காமெடி மற்றும் பாடல் போன்றவை இருந்தால் தான் படம் ஹிட் அடிக்க  முடியும் என நிலவி வந்த நிலையில். இதனை மாற்றி அமைக்க முயற்சித்த பல படங்கள் வெற்றி தோல்வி அடைந்துள்ளன. ஆனால் பாடல்களே இல்லாமல் பல படங்களில் ஹிட் அடித்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவற்றின் பட்டியல் பின்வருமாறு:

1. பல வெற்றி படங்களை கொடுத்த கமலஹாசன் இப்படத்தில் வித்தியாசமான ஒரு கதை களத்தை அவர் தேர்ந்தெடுத்தார் இதனை சற்றும் எதிர்பார்க்காத அவரது ரசிகர்கள் படம் ஓடுமா ஓடாதா என்ற நிலை இருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. உன்னைப்போல் ஒருவன் படம் மக்கள் மத்தியில் ஒரு காட்டுத்தீ போல பரவியது.

ஹாலிவுட்டில் ( A Wednesday) என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் உன்னைப் போல் ஒருவன் திரைப்படம். உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் கமலஹாசன் மற்றும் மோகன்லால் இவர்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் எந்த ஒரு பாடல்களும் கிடையாது இது முழுக்க முழுக்க தீவிரவாதிகளுக்கும் மற்றும் தனி ஒருவனாக கமலுக்கும் இடையே நடக்கும் ஒரு போராட்டம் எடுக்கப்பட்டுள்ளது இப்படம்.

2. பயணம் படம் ஒரு லாபகரமாக படமாகவே அமைந்தது இப்படம் பல தியேட்டர்களில் எடுக்காத நிலையில் குறைந்த தியேட்டர்களில் படம் வெளியாகியது  ஏனென்றால் இப்படத்தில் எந்த ஒரு பாடல்களும் கிடையாது மற்றும் முக்கியமான பெரிய நடிகர்கள் இல்லாததால் படம். ஓடாது என எதிர்பார்க்கப்பட்ட வெளியாகியது. கதைகளம் சிறப்பாக இருந்ததால் இந்த திரைபடம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது வெற்றிப்படமாக உருமாறியது. படத்தின் கரு விமானத்தை கடத்த நினைக்கும் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது என்பதே படத்தின் முக்கிய அம்சமாகும். துணை நடிகர்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். இப்படத்தில் அவரது பங்களிப்பு மிக முக்கியமாக அமைந்தது. நாகார்ஜுனா மற்றும் பிரகாஷ் அவர்களின் நடிப்பு படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது.

3. கைதி திரைப்படம் 2019 ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்து மக்கள் மத்தியில் மிகப் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது இப்படம்  ஹீரோயின் மற்றும் பாடல் எதுவும் இல்லாமல் ஹிட்டடித்த படம் என மக்கள் மத்தியில் இன்றளவும் பரவலாக பேசப்படும் ஒரு படமாக இப்படம் அமைந்திருக்கிறது. படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரும் அதிரடியாகவும், சுவாரஸ்யமாகவும் அமைந்திருக்கும். இப்படம் கார்த்திக் கேரியரில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

4. துப்பறிவாளன் படம் விஷாலுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இது ஒரு வித்தியாசமான படமாகவே அமைந்தது ஏனென்றால் இதில் வேறு விதமான நடிப்பை அவர் நடித்திருந்தார். இப்படம் திரில்லர் மற்றும் ஆக்சன் கதை களத்தை கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் கோலிவுட்டில் ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் எந்த ஒரு பாடலும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

5. 2016ம் ஆண்டு பல விருதுகளை வென்றுள்ள படம் விசாரணை. இப்படம் ஒரு உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் விசாரணை. இப்படத்தில் இருந்து எந்த ஒரு பாடலும் கிடையாது ஆனால் இப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. திரைப்பட முன்னணி பிரபலங்கள் இப்படத்தை மிகவும் புகழ்ந்துள்ளனர்.

6. 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஷாக். இப்படம் திகில் மற்றும் திரில்லர் கதையாக உருவாக்கப்பட்டது. இப்படத்தினை தியாகராஜன் அவர்கள் இயக்கி மற்றும் தயாரித்தும் உள்ளார். தமிழ் சினிமாவில் இதனைத் தொடர்ந்து பல திரில்லர் மற்றும் திகில் படங்களை எடுத்து வந்தனர். படத்தில் இருந்து ஒரு பாடல் காட்சியும் கிடையாது.

7. ஹவுஸ் ஃபுல் படம் 1999 ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது இதில் பார்த்திபன் வயதான கெட்டப்பில் நடித்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது அதுமட்டுமில்லாமல் விக்ரம் அவருக்கு இது ஒரு நல்ல படமாக அமைந்தது. இப்படத்தில் எந்த ஒரு  பாடல்களும் கிடையாது. இத்தனை மக்கள் இரண்டு மணி நேரம் பார்த்து ரசித்தனர்.

8. 1995ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் குருதிப்புனல். இப்படத்தின் மூலம் கமல் மற்றும் அர்ஜுனுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டன அது மட்டும் இல்லாமல் முன்னணி பிரபலங்கள் இப்படத்திற்காக அவர்களை வாழ்த்தினார்கள். இப்படம் முழுவதும் ஆக்ஷன் நிறைந்த கதையாகவே அமைந்திருந்தது. இப்படத்தில் எந்த ஒரு பாடல்களும்  இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற பல படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளியாகி வெற்றி அடைந்துள்ளன. ஆரண்ய காண்டம், நடு நிசி நாய்கள், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், கேம் ஓவர், யூ டர்ன், வீடு, அந்த நாள் போன்ற படங்கள் ஆகும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment