சம்பளம் வாங்காமல் பாலிவுட் படத்தில் நடித்த அஜித்!! வீடியோ இதோ!! மீண்டும் பாலிவுட்டில் அஜித்தை வைத்து படம் எடுக்க விரும்பும் பிரபல நடிகர்.

0

thala ajith bollywood movie video: தல அஜித் பொதுவாகவே பிற மொழி படங்களில் நடிப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை. இருந்தாலும் ஷாருக்கான் அன்பாக கேட்டுக் கொண்டதற்காக பாலிவுட் படமான அசோகா என்ற படத்தில் ஷாருக்கானுக்கு அண்ணனாக அஜீத் நடித்திருந்தார்.

அஜித் நடித்த இந்த படத்தின் வீடியோவை  ஷாருக்கானின் ரெட் சில்லி  என்டர்டைன்மென்ட் தற்போது வெளிவிட்டுள்ளது. அஜித் இந்த படத்திற்காக சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் மேலும் 5 நாட்கள் நடித்துக் கொடுத்தாராம். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.

சென்னையில் விருது வழங்கும் விழாவில் ஒரு பேட்டியில் ஷாருக்கான் பேசும்போது அஜித் என்ற பெயரை சொன்னதும் ரசிகர்கள் அவரை பேச விடாமல் சத்தம் போட்டனர். இதை பார்த்த ஷாருக்கான் படத்தில் நடிக்கும் போது அஜித் இவ்வளவு பெரிய ஆள் என்று எனக்கு தெரியாமல் போனது என அந்த இடத்தில் வருத்தம் தெரிவித்தாராம்.

தற்போது இந்த வீடியோவை ஷாருக்கான் வெளியிட்டதற்கு காரணம் என்ன என்று பார்த்தால். ஷாருக்கான் அஜித்தை வைத்து படம் தயாரிக்கும் எண்ணத்தில்  உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவித்துள்ளது.  தற்ப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.