நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். சினிமாவில் முதன் முதலாக ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களைப் பெற்று கொடுத்ததால் சிறந்த நடிகைக்கான சைமா விருதையும் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து பல கன்னட திரைப்படம் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்தார் பின்பு தமிழில் முதன்முதலாக கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் என்ற திரைப்படத்தில் ருக்குமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு முன்பே இவர் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறார்.
மேலும் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் இங்கெம் இங்கெம் என்ற பாடல் மொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டார் அதுமட்டுமில்லாமல் உலக அளவில் அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ராஷ்மிகா மந்தண்ணா தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடித்ததற்கா அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் பாந்திரா பகுதியில் இருக்கும் இவர் வீட்டை விட்டு தன்னுடைய செல்ல நாய்க்குட்டி உடன் வெளியே சுற்றும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுப்பது போல் சில சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அதைப் பார்த்த ரசிகர்கள் கிழிந்த கால் சட்டையுடன் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கிறார் என கமெண்ட் செய்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் அந்த நாய் குட்டியாக நாங்கள் இருக்கக் கூடாதா என சில நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளார்கள்.
