பிக்பாஸ் அமீரை திருமணம் செய்வீர்களா.. ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த பவானி.!

0
bhavani and ameer
bhavani and ameer

சின்னத்திரையில் சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெவ்வேறு துறைகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிப்பு, நடனம், இசை, நாடகம் போன்ற பல துறைகளில் இருந்தும்.

பிரபலங்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் மக்களிடையே பிரபலம் அடைந்து தற்போது சினிமாவில் சிறப்பாக பயணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ஒளிபரப்பாகி நிறைவுபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் பாவணி.

இவர் சின்னத்திரை சீரியல் நடிகை ஆவார். பாவணி கடைசியாக நடித்த சின்னத்தம்பி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமடைந்தவர். இந்த நிலையில் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். பிக்பாஸ் அனைத்து சீசன்களிலுமே காதல், சென்டிமென்ட், அழுகை, கோபம் என பலவற்றையும் போட்டியாளர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

அந்தவகையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனிலுமே காதல் மலர்ந்தது. இந்த சீசனில் நடன இயக்குனராக கலந்துகொண்ட அமீர் பாவணியை காதலிப்பதாக இந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார். ஆனால் பாவனி அதற்கு மறுப்பு தெரிவித்து நட்பாகவே பேசிவந்தார். ஒரு கட்டத்தில் அமீர் மற்றும் பாவனி இருவரும் நல்ல பிரண்ட் ஆகவே இருந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மகளிர் தினத்தையொட்டி பாவனி ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார்.

அங்கு பேசிய பாவனி பெண்கள் எப்போதும் தைரியமாகவும் துணிச்சலுடனும் இருக்க வேண்டும். மேலும் எதற்காகவும் மற்றவர்களை நம்பி இருக்கக் கூடாது என பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். அப்பொழுது கல்லூரி மாணவிகள் பலரும் அமீருடன் திருமணம் குறித்து கேட்டதற்கு பாவணி எங்கள் வீட்டில் மாப்பிள்ளை தேடிக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் எனக்கு விருப்பமில்லை மேலும் நானும் அமீரும் நல்ல நண்பர்கள் மட்டும் தான் எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.